மதி சூழ்ந்த வியன் இரவு கடந்து,
சூரியனின் கதிர் உடலை வருடினும் –
சமூக ஊடகச் சுழலில் சிக்கிய தலைமுறையைக் கண்டு
பதைக்கிறது நெஞ்சம்!!
“காக்கை, குருவி எங்கள் சாதி” – என்றேன்
இன்று நூற்றாண்டு கடந்தும் மனிதநேயம், சமத்துவம்
யாவும் எட்டாக்கனியே!!
புரவி எனப் பாயும், தீ என நெஞ்சம் கொண்ட
என் இளைஞர் கூட்டம் எங்கே?
“அகம் கருகி, புறம் கொதித்தெழுகிறது”
அச்சம் நிறைந்த தலைமுறையில்,
ஆண்–பெண் சமத்துவம் கூடினும்,
எங்கே என் புதுமைப்பெண்?
மாற்றங்கள் என்றும் மாறாதது,
எனினும் நல்லதொரு மாற்றமே சிறப்புமிக்கது!!
நான் எண்ணிய பாரதமும் – முழுமையானது, மென்மைமிக்கது.
இன்று பாதி ஆழி கடந்துவிட்டோம்,
எஞ்சியவை எப்போது?
காத்திருப்போம்!! வாழ்க பாரதம்!!




